உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக். சாயம் வெளுத்தது: இந்தியாவின் ஸ்ட்ராங் மெசேஜ் | India pakistan war | Asim Munir | pakistan

பாக். சாயம் வெளுத்தது: இந்தியாவின் ஸ்ட்ராங் மெசேஜ் | India pakistan war | Asim Munir | pakistan

India pakistan war pakistan army chief Asim Munir speech in US Indian Foreign Ministry reply அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் புளோரிடா மாகாணத்தில் நடந்த விருந்தில் பங்கேற்றார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் பேசிய ஆசிம் முனீர், இந்தியாவுக்கு பகிரங்கமாக அணு ஆயுத மிரட்டல் விடுத்தார். எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் அழியும் நிலைக்கு சென்றால், எங்களுடன் சேர்த்து பாதி உலகத்தை அழித்து விடுவோம்; ஏனென்றால் பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என இந்தியாவுக்கு ஆசிம் முனீர் மிரட்டல் விடுத்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது குறித்தும் ஆசிம் முனீர் பேசினார். சிந்து நதி இந்தியாவின் குடும்ப சொத்து இல்லை. சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், மறுகணமே 10 ஏவுகணைகளை வீசி அணையை தகர்ப்போம் எனவும் கொக்கரித்தார், ஆசிம் முனீர். உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆசிம் முனீரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என, இந்தியா கூறியிருக்கிறது. இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா சென்றிருந்த போது பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பேசியதாக கூறப்படும் கருத்துகள் இந்தியாவின் கவனத்துக்கு வந்துள்ளது. அணு ஆயுதத்தை வைத்து மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானுக்கு வாடிக்கையான விஷயம். அது வாய்சவடால் தானே ஒழிய வேறில்லை. பாகிஸ்தான் கூறிய இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களில் பொதிந்துள்ள அர்த்தத்தை வைத்து சர்வதேச நாடுகள் இந்த விஷயத்தில் சொந்தமாக ஒரு முடிவுக்கு வர முடியும். பயங்கரவாத அமைப்புகளும் ராணுவமும் கைகோர்த்து செயல்பட்டு வரும் ஒரு நாட்டில் அணுசக்தி தொடர்பான கட்டுப்பாடுகளும் விதிகளும் நேர்மையாக இருக்குமா? என்ற சந்தேகம் உலக நாடுகளிடையே ஏற்கனவே அதிகமாக உள்ளது. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போலத்தான் பாகிஸ்தான் தளபதியின் இந்த கருத்து அமைந்திருக்கிறது. நட்புறவுடன் இருக்கும் 3வது நாட்டின் மண்ணில் இருந்தபடி இப்படியொரு பொறுப்பற்ற கருத்துகளை பாகிஸ்தான் தளபதி கூறியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது. இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடன் உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது. பாகிஸ்தான் தளபதி ஆசிம் முனீரின் பொறுப்பற்ற கருத்துக்கள் தொடர்பாக மத்திய அரசின் வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு பொறுப்பற்ற நாடு என்பதை ஆசிம் முனீரின் கருத்துகள் அம்பலப்படுத்தி விட்டது. அமெரிக்காவின் ஆதரவு எப்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் தன் உண்மையான நிறத்தை காட்டி விடுவது வாடிக்கைதான். அதுதான் ஆசிம் முனீரின் பேச்சில் எதிரொலித்துள்ளது. இந்த விஷயத்தை இந்தியா அப்படி த்தான் பார்க்கிறது. அதுமட்டுமல்ல தப்பானவர்களின் கைகளில் அணு ஆயுதம் கிடைத்து விட்டதால் உலகமே ஆபத்தில் இருக்கிறது என்பதையும் ஆசிம் முனீரின் பேச்சு உணர்த்தியிருக்கிறது. இதன் பிறகாவது, பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பான IAEA தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறின.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை