சுமுக தீர்வு ஏற்படும் இரு தரப்பு நம்பிக்கை
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு வந்தவுடன் டொனால்டு டிரம்ப் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிகளை அதிகப்படுத்தினார். இந்தியாவுக்கு முதலில் 25 சதவீத வரி என அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கிறோம் என மீண்டும் அறிவித்தார். 50 சதவீத வரியால் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் பாதித்தன. ஏற்கனவே நடந்து வந்த இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையும் பல சுற்றுகளைக் கடந்து முடிவு எட்டப்படாமல் நின்றன. இந்தியாவை மிரட்டி பணியவைத்துவிடலாம் என எண்ணிய அதிபர் ட்ரம்பின் முயற்சி கடைசியில் தோல்வி அடைந்தது. இந்தியாவின் பொறுமை அமெரிக்காவின் கோபத்தை குறைத்தது. இந்தியா உடனான வர்த்தக தடைகளை சரி செய்வதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு பேச்சு வார்த்தையை தொடர்கிறது என கடந்த வாரம் அதிபர் டிரம்ப் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு இன்று டில்லி வந்து இந்திய வர்த்தக துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை துவங்கினர் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்கனவே வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் நடந்தன. அமெரிக்காவின் விவசாயம் மற்றும் பால்பண்ணை சார்ந்த பொருள்களை இந்தியாவில் விற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியது. இந்திய விவசாயிகளை அது பாதிக்கும் என்பதால் மத்திய அரசு முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்கா 50 சதவீத வரியை இந்தியா மீது விதித்ததால் வர்த்தக பேச்சு வார்த்தைகள் நின்றுபோயின. இப்போது அமெரிக்கா இறங்கி வந்து குழுவை அனுப்பி மீண்டும் பேச்சுகளைத் தொடங்கி இருக்கிறது. இதில் இந்தியாவும் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. #IndiaUSTrade #TradeDealTalks #Trump #IndiaUSA #EconomicPartnership #USIndiaRelations #TradeNegotiations #BilateralTrade #InternationalTrade #GlobalEconomy #TradeUpdates #TradeAgreements #TrumpAdministration #IndiaEconomy #Markets #TradeDiscussions #StrategicAllies #IndiaTradePolicy #USTradeRelations