இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் பின்னால் பகீர் india vs pakistan | WLF | US | Trump | Asim munir
‛இந்தியா, பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று போகிற இடமெல்லாம் மார்தட்டிக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதுமட்டும் அல்ல, பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் இந்தியாவையும், பயங்கரவாதத்தை வளர்க்க சோறு போடும் பாகிஸ்தானையும் அவர் ஒரே தட்டில் வைத்து பேசுவது நம் நாடு உட்பட பல நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. டிரம்ப் போர் நிறுத்தத்தை உரிமை கோருவதற்கும், இந்தியாவுக்கு சமமாக பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் பின்னால் இருக்கும் மர்மம் இப்போது உடைந்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கும் டிரம்ப் குடும்பத்துக்கும் இருக்கும் மிகப்பெரிய லிங் வெளிச்சத்துக்கு வந்து அதிர வைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்பது பற்றிய பரபரப்பு ரிப்போர்ட்டை பார்க்கலாம். காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளை வேட்டையாட ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானையும் இந்தியா பந்தாடியது. இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் கொத்து கொத்தாக அனுப்பிய ட்ரோன், ஏவுகணைகளை ஆகாஷ் உள்ளிட்ட நம் வான் தடுப்பு கவசங்கள் வானிலேயே முறியடித்தன. அதே நேரம் இந்தியா நடத்திய குண்டு வீச்சில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்கள் 12ல் 11 இடங்கள் தகர்க்கப்பட்டன.