வீரர் ராகேஷ்குமாரின் நிறைவேறாத ஆசை | Army JCO soldier rakesh kumar |J&K Kishtwar encounter
சண்டையில் ராணுவ வீரர் மரணம் வீர முழக்கமிட்ட மனைவி உணர்ச்சிமிகு காட்சிகள் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு கடந்த மாதம் 16ம் தேதி பொறுப்பேற்றது. அதன்பிறகு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. ராகேஷ்குமார் என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவு வீரரான ராகேஷ்குமார், இமாச்சலப்பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் உள்ள Barnog பர்னாக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் இறந்தது பற்றிய தகவலை அறிந்ததும் பர்னாக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.