உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டார்கெட் செய்வது நியாயமில்லை; அமெரிக்காவை விளாசிய இந்தியா india trade with russia| US tariff threat|

டார்கெட் செய்வது நியாயமில்லை; அமெரிக்காவை விளாசிய இந்தியா india trade with russia| US tariff threat|

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்து இருந்தார். உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவிடம், எரிபொருள், ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்குகிறது. அதனால், வரியுடன் அபராதமும் விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். வரும் 7 ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வர உள்ளது. இச்சூழலில், இந்தியாவுக்கான வரியை மேலும் உயர்த்துவேன் அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவிலான எண்ணெய் கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல், அதை வெளி சந்தையில் அதிக லாபத்துக்கு விற்கிறது. உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை. இதன் காரணமாக, இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்துகிறேன் என்று டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு இந்திய அரசு பதில் அளித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பின், இந்தியாவுக்கு வழக்கமாக எண்ணெய் சப்ளை செய்பவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தங்கள் கவனத்தை திருப்பினர்.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை