விரைவில் ஆஸ்திரேலியா டு கோவைக்கு விமான போக்குவரத்து! Australia | Coimbatore | Airport
ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு விமான சேவை துவங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்ட அட்டவணைபடி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.05 மணிக்கு சிங்கப்பூரை வந்தடையும். அங்கு 6 மணி நேர ஓய்வுக்கு பின் அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு காலை 6.10 மணிக்கு கோவை வந்தடையும். இதே சிட்னி நகரில் இருந்து மதியம் 3.55 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 9 மணிக்கு சிங்கப்பூரை அடையும். அங்கு 7 மணி ஓய்வுக்கு பின் அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.10 மணிக்கு கோவையை அடையும். இந்த புதிய விமான போக்குவரத்து கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் மேலும் சில சர்வதேச விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.