வாஷிங்டனில் நடந்ததை சொல்லி மோடிக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை Modi China Trip| SCO Summit
வாஷிங்டனில் நடந்ததை சொல்லி மோடிக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை Modi China Trip| SCO Summit| modi meets xi jinping| modi meets putin| Russia ukraine war| Zelenskyy speaks to modi பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவுக்கு சென்று உள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மாநாட்டுக்கு வரும் ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி சந்திக்கும்போது, ரஷ்யா- உக்ரைன் போர் பற்றியும் நிச்சயம் விவாதிப்பார் என்றே தெரிகிறது. இச்சூழலில், இந்த சந்திப்புக்கு முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார். போர் தொடர்ந்து வரும் நிலையில் அவரது அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையாடலின்போது, உக்ரைன்-ரஷ்யா மோதல்; மனிதாபிமான அம்சங்கள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்து உள்ளார். பிரதமர் மோடியுடன் உரையாடியது பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, வாஷிங்டனில் அதிபர் டிரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன் என கூறியுள்ளார். அமைதியை அடைவது பற்றி அந்த கூட்டத்தில் முக்கியமான கருத்துக்கள் பகிரப்பட்டன. ரஷ்ய தலைவர் உடனான சந்திப்புக்கு உக்ரைன் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினோம். ஆனால், 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், ரஷ்யாவோ எந்த பாசிட்டிவ் ஆன சிக்னலையும் தரவில்லை. மாறாக உக்ரைன் மீதா தாக்குதல்கள் நடத்தி மக்களை கொன்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த போரின் முடிவு என்பது உடனடி போர் நிறுத்தம் மற்றும் தேவையான அமைதியுடன் தொடங்க வேண்டும். இந்த நிலைப்பாடு அனைவராலும் ஆதரிக்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின்போது, நடைபெறும் சந்திப்புகளின்போது, இதற்கான முயற்சிகளை எடுக்கவும், இது பற்றி ரஷ்யா மற்றும் மற்ற தலைவர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்தியா தயாராக இருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.