/ தினமலர் டிவி
/ பொது
/ முன்னாள் எஸ்ஐ சம்பவ வழக்கில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! | Inspector suspend | Ex SI Case | Nellai Polic
முன்னாள் எஸ்ஐ சம்பவ வழக்கில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! | Inspector suspend | Ex SI Case | Nellai Polic
திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் ஜாஹிர் உசேன் பிஜிலி வயது 60. சென்னையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார். டவுனில் உள்ள முஸ்லிம் தைக்காவின் நிர்வாகியாக செயல்பட்டார். தைக்காவுக்கு அருகே சுமார் 36 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த நூர்னிஷா சொந்தம் கொண்டாடுகிறார். நூர்னிஷா பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை இரண்டாவதாக திருமணம் செய்தார். கிருஷ்ணமூர்த்தி முஸ்லிம் மதத்திற்கு மாறி தவ்ஃபீக் என பெயரை மாற்றிக் கொண்டார். அந்த நிலம் வக்பு போர்டுக்கு சொந்தமானது என ஜாஹிர் கூறி வந்தார். இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மார் 19, 2025