உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈராக் ஷாப்பிங் மாலில் நடந்த கோர சம்பவம் | Iraq shopping mall | Iraq fire

ஈராக் ஷாப்பிங் மாலில் நடந்த கோர சம்பவம் | Iraq shopping mall | Iraq fire

ஈராக்கின் அல்-குட் நகரில் பெரிய ஷாப்பிங் மால் உள்ளது. 5 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் 4வது மாடியில் திடீரென தீ பிடித்தது. அப்படியே ஒவ்வொரு தளங்களுக்கும் தீ பரவி மொத்த கட்டமும் எரிந்தது. மக்கள் வெளியேறும் பகுதி முழுக்க தீ சூழ்ந்து காணப்பட்டது. உள்ளே சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் கருகினர். இதுவரை 60 பேர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பலத்த காயம் அடைந்தனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்னும் கட்டடத்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் உடனடியாக உறுதியாகவில்லை. இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழு விவரங்கள் பகிரப்படும். இப்போதைக்கு கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என அல்-குட் கவர்னர் முகமது அல் மியாஹி கூறினார்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !