உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான் | Israel attack lebanon | Iran called un meeting | Hezbol

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான் | Israel attack lebanon | Iran called un meeting | Hezbol

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ளது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. ஹிஸ்புல்லாவும் பதில் தாக்குதல் நடத்துகிறது. ஒரு வாரத்தில் மட்டும் ஹிஸ்புல்லாக்களின் 3 முக்கிய தளபதிகளின் கதை முடித்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவையும் தீர்த்து கட்டியதாக நேற்று அறிவித்தது. ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது வரலாற்று திருப்பு முனை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் லெபனான் தாக்குதல் நடத்தியது. ஜெருசலேம் மற்றும் மேற்கு கரையின் புறநகர் பகுதிகளில் லெபனானின் வான்வழி தாக்குதல் வருவதற்கான சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ