இஸ்ரேல்_ ஹமாஸ் போர்: இந்தியா நிலைப்பாடு இதுதான் | Israel vs Hamas | India on Israel | UN
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர், இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்து இஸ்ரேல்-ஈரான் போர் வெடிக்கும் அபாயமும் தொற்றி உள்ளது. இந்த போரால் இஸ்ரேல், பாலஸ்தீன், லெபனானில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா சபை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூடியது. இதில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை கூறியது. விவாதத்தின் போது இது பற்றி ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் Parvathaneni Harish கூறியது: போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காக இன்னும் பல உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. இதுவரை பாலஸ்தீன் வளர்ச்சிக்காக இந்தியா ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கி இருக்கிறது. சமீபத்தில் 6 டன் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்தோம். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கடுமையான கண்டனத்துக்கு உரியது.