இஸ்ரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீன் உத்தரவு-பரபரப்பு | israel vs hamas | palestine recognition | gaza war
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. காசாவில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகளை கூண்டோடு காலி செய்யும் வரை விடமாட்டோம் அறிவித்து, தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக பேசப்படும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது என்ற கோஷம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. எந்த காரணத்தை கொண்டும் பாலஸ்தீன் என்ற புதிய நாட்டை அமைய விடமாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியாக நிற்கிறது. இருப்பினும் பாலஸ்தீனை அங்கீகரிக்க உலகின் பெரும்பாலான நாடுகள் முன்வந்து விட்டன. ஐநாவின் 80வது பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. பாலஸ்தீன் பற்றி இதில் முக்கிய விவாதம் நடக்கிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளும், ஹமாஸ் தலையீடு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் ஐநா பொது சபை கூட்டத்தில், பாலஸ்தீனத்தின் அதிகார சபையின் அதிபரான மஹ்மூத் அப்பாஸ், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசினார். அவர் கூறியது: பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான உறுப்பினராவதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் கோருகிறோம். எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எவ்வித பங்களிப்பையும் வழங்கக்கூடாது.