இஸ்ரேல் அட்டாக் பின்னால் கேரள தொழிலதிபர்-அதிர்ச்சி தகவல் Israel vs Hezbollah | Pager Blast
லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கராவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர், வாக்கி டாக்கி அட்டாக் உலகையே அதிர வைத்தது. மர்மம் நிறைந்த இந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல், ஹிஸ்புல்லா மோதல் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போது ஹிஸ்புல்லா தாக்குதலை துவங்கி இருக்கிறது. இன்று பகலில் லெபனான் எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலின் வான்படை முகாம்களை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது. 3 ரவுண்டு ராக்கெட் குண்டுகளை அள்ளி வீசியது. மொத்தம் 140 ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டன. இதில் இஸ்ரேலின் வான்படை சம்மந்தப்பட்ட கட்டுமானங்களை சிதைத்து விட்டதாக ஹிஸ்புல்லா கூறி உள்ளது. இதனால் இஸ்ரேல், லெபனான் எல்லையில் பதட்டம் நீடிக்கிறது.