ஹிஸ்புல்லா தலையில் இஸ்ரேல் இறக்கிய அடுத்த இடி? | Israel vs Hezbollah | Pager Blast | walkie-talkies
பாலஸ்தீனுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, சிரியாவில் உள்ள ஹவுதிகளுடனும் அவ்வப்போது சண்டையிட்டு வருகிறது. இப்போது திடீரென இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தி வந்த 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்து சிதறின. எல்லாம் அரை மணி நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 2,750 காயம் அடைந்தனர். இன்னும் 100 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த கொடூர செயலுக்கு காரணம் இஸ்ரேல் தான் என்று ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி வந்தது. பேஜர் வெடித்த சம்பவத்தில் இருந்தே மீண்டு வரதா ஹிஸ்புல்லாக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக மறுநாளே வாக்கி டாக்கிகளும் வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.