இஸ்ரேல் PM நெதன்யாகு தடாலடியால் திக் திக் | Israel vs Hizbollah | Benjamin Netanyahu | pager attack
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை இஸ்ரேல் பந்தாடி வருகிறது. காசாவில் ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் துவங்கிய நேரத்தில் இருந்து ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்த இஸ்ரேல், பேஜர் அட்டாக் மூலம் முழு வீச்சில் ஹிஸ்புல்லாவை தாக்க துவங்கியது. உலகையே அதிர வைத்த இஸ்ரேலின் பேஜர் அட்டாக்கில் ஹிஸ்புல்லாக்கள் வைத்திருந்த 3 ஆயிரம் பேஜர்களும் அரை மணி நேரத்தில் வெடித்து சிதறின. மறுநாள் நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க 140 குண்டுகளை இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா போட்டது. இதில் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை.