உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்டம் முறியடிப்பு J& K |CIK Police | Anti terror raids |10 arrested

காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்டம் முறியடிப்பு J& K |CIK Police | Anti terror raids |10 arrested

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் டூரிஸ்டுகள் 26 பேரை சுட்டு கொன்றனர். இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கியது. பதில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் இரு தரப்பு ராணுவமும் சண்டையை நிறுத்திக்கொண்டன. அதன்பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவு சக்திகளை ஒடுக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தீவீரம் காட்டின. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஜம்மு-காஷ்மீரில் இருந்து உதவி செய்வோரை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஜம்மு-காஷ்மீர் போலீசின் உளவு பிரிவாக செயல்படும் சிஐகே(Counter Intelligence Kashmir - CIK) போலீசாரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன

ஜூலை 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !