உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜ்ய சபாவில் TDP கணக்கு ஸ்டார்ட் ஆகிறது Jagan mohan Reddy 2 Rajya Sabha MPs Resigned Joining TD

ராஜ்ய சபாவில் TDP கணக்கு ஸ்டார்ட் ஆகிறது Jagan mohan Reddy 2 Rajya Sabha MPs Resigned Joining TD

லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இதில், 135 சீட்களில் வெற்றிபெற்று தெலுங்குதேசம் கட்சி ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 சீட்களை மட்டுமே பிடித்து ஆட்சி கட்டிலை விட்டு வெளியேறியது. ஆந்திராவில் 25 லோக்சபா சீட்கள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சி 16, அதன் கூட்டணி கட்சிகளான பாஜ 3, ஜனசேனா 2 இடங்களை அள்ளின. ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், ராஜ்ய சபாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பலம் 11 ஆக இருந்தது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு சோதனை மேல் சோதனை வந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரசார் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது; சந்திரபாபு நாயுடு அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறார் என குற்றம்சாட்டி, ஜெகன்மோகன் ரெட்டி டில்லியில் போராட்டம் நடத்தினார்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !