உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நம் பாரதம் வித்தியாசமானது; ஜக்தீப் தன்கர் உரை jagdeep dhankhar| jipmer

நம் பாரதம் வித்தியாசமானது; ஜக்தீப் தன்கர் உரை jagdeep dhankhar| jipmer

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கு நடந்தது. மருத்துவ மாணவர்கள் மத்தியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர். உரையாற்றினார். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் நமக்கு அதிகளவில் தேவைப்படுகிறார்கள். ஆராய்ச்சி மையங்கள், மருத்துவமனைகளை உருவாக்க வேண்டி உள்ளது. நாட்டின் ஆரோக்கியம்தான் வளர்ச்சிக்கான அடிப்படை. ஒருவர் திறமையானவராக, இந்த சமூகத்திற்கு அர்ப்பணிக்கும் ஆர்வம் உள்ளவராக, சுயநலம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், அவர் ஆரோக்யமாக இல்லாவிட்டால் என்ன பயன்? Fit India மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். கிராமங்கள் வரை டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. உலகளவில் பெருளாதாரத்தில் இந்தியா விரைவில் 3வது இடத்துக்கு முன்னேறும். பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி நம் நெறிமுறைகளுக்கு சவால் விட்டனர். உலகில் மிகவும் அமைதியை விரும்பும் நாடு இந்தியா.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி