/ தினமலர் டிவி
/ பொது
/ பாகுபலி காளைக்கு சிலை வைத்து கொண்டாட கோரிக்கை Pagupali Veerappan | Jallikattu Kaalai| Selam |Special
பாகுபலி காளைக்கு சிலை வைத்து கொண்டாட கோரிக்கை Pagupali Veerappan | Jallikattu Kaalai| Selam |Special
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சேலம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த, பாகுபலி என்ற வீரப்பன் காளை 9 சுற்றுகளிலும் வீரர்களிடம் பிடிபடாமல் முதல் பரிசு பெற்றது. பரிசு பெற்ற காளையை வளர்த்த மோகன் மற்றும் அவரது குடும்பத்தார், குல தெய்வம் கோயிலுக்கு பாகுபலியை அழைத்துச் சென்று பூஜை செய்தனர். காளைக்கு பலர் பரிசுகள் வழங்கினர். முதல் முறையாக வட தமிழகத்தை சேர்ந்த ஒரு காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றுள்ளது. அதன் நினைவாக சேலம் ரவுண்டானாவில் பாகுபலி காளைக்கு அரசு சிலை அமைக்க வேண்டும் என மோகன் கேட்டுக்கொண்டார்.
ஜன 29, 2025