/ தினமலர் டிவி
/ பொது
/ ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் Jammu Kashmir | Assembly Elections | Dates | Indian Election
ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் Jammu Kashmir | Assembly Elections | Dates | Indian Election
2019-ல் ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அங்கு கவர்னர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஜம்மு -காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். தேர்தல்கள் நடத்த வேண்டும் என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு -காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 87 லட்சம் பேர் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.
ஆக 16, 2024