மக்களிடம் எப்படி நடந்துக்கணும் அமைச்சர்களுக்கு உமர் அட்வைஸ் Jammu kashmir| omar abdhullah
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர். உமருக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 2009 முதல் 2014 வரை உமர் அப்துல்லா முதல்வராக இருந்தார். தற்போது 2வது முறையாக அந்த பதவிக்கு வந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வரும் இவர்தான். முதல்வர் சீட்டில் அமர்ந்து அலுவல்களை தொடங்கிய உமர் அப்துல்லா, அந்த படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து திரும்ப வந்துவிட்டேன் என்பதை குறிக்கும் வகையில் Im back என பதிவிட்டு உள்ளார். பதவிக்கு வந்த உடனே அதிகாரிகள், அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்தார். ஜம்மு காஷ்மீரில் சாலை வழியாக நான் எந்த இடத்திற்கு சென்றாலும், அதற்காக கிரீன் காரிடார் அமைக்க வேண்டியது இல்லை. வாகன போக்குவரத்தை நிறுத்தி வைக்க கூடாது என கூறியுள்ளார். மக்களுக்கு சிரமம் ஏற்படுவதை குறைக்கவும், சைரன்கள் பயன்பாட்டை குறைக்கவும் போலீசுக்கு உத்தரவிட்டு உள்ளார். லத்தியை சுழற்றுவதோ, பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக நடந்த கொள்வதோ கூடாது. அமைச்சர்களும் இதையே பின்பற்ற வேண்டும். எல்லாவற்றிலும் பொதுமக்களுடன் நட்பாக நடந்து கொள்ள வேண்டும்.