உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொந்த கட்சி பிளவுபடுவதை விரும்பாததால் பதவி விலக முடிவு Japan pm|shigeru ishiba| resigned

சொந்த கட்சி பிளவுபடுவதை விரும்பாததால் பதவி விலக முடிவு Japan pm|shigeru ishiba| resigned

ஜப்பானில் தி லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவரான ஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராக பதவியேற்றார். ஓராண்டு முடிவதற்குள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 68 வயதான ஷிகெரு இஷிபா பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் அவருடைய கட்சியினரின் நம்பிக்கையை பெறுவதில் தோல்வி அடைந்தார். கடந்த ஜூலையில் மேலவையில் அவர் பெரும்பான்மையை இழந்ததில் இருந்து பதவி விலக கோரி அழுத்தங்கள் வந்தவண்ணம் இருந்தன. ஜப்பான் மீதான அமெரிக்க வரி விதிப்பு போன்ற காரணங்களை சுட்டி காட்டி அவர் பதவி விலக மறுத்து வந்த நிலையில், இன்று அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆளும் கட்சியில் பிளவு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இஷிபாவின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து தி லிபரல் டெமாக்ரடிக் கட்சி நாளை முடிவு செய்ய உள்ளது.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை