உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூ.450 கோடி சர்க்கரை ஆலை சசிகலாவுக்கு வந்தது சிக்கல் jayalalitha sasikala 450crore sugar factory pa

ரூ.450 கோடி சர்க்கரை ஆலை சசிகலாவுக்கு வந்தது சிக்கல் jayalalitha sasikala 450crore sugar factory pa

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. கையில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பருக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில வாரங்களில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 450 கோடி ரூபாய்க்கு காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையை வாங்கியுள்ளார் எனற பரபரப்பு தகவல் இப்போது அம்பலமாகியுள்ளது.

செப் 06, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mahendran Puru
செப் 07, 2025 07:26

முன்னரே வெளிவந்த செய்தி. கூட்டணி எதிர்பார்ப்பில் நிலுவையில் இருந்தது. கூட்டணி இல்லை என்று அறிவித்தவுடன் நடவடிக்கை தொடர்கிறது. சபாஷ் பாஜக.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி