ஜெயலலிதா சொத்து தீபாவுக்கு இல்லை: தீர்ப்பு வெளியானது | Jayalalithaa Asset Case | Jayalalithaa Case
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 1996ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரங்கள், 28 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக ஸ்பெஷல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்பதை கோர்ட் உறுதி செய்தது. அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வெளிவந்த போது ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன மேலும் இவர்கள் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கட்ட தவறினால் அதனை ஈடுகட்ட கைப்பற்றப்பட்ட நகைகளை ஏலம் விட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் நகை மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி ராமமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை கர்நாடக அரசு ஏலம் விடுதற்கு பதில் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இந்த சொத்துக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் அரசிடம் ஒப்படைக்கப்பட இருந்தது. இதற்கிடையில் கர்நாடக ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் எங்களுக்கே சொந்தம் என என கோரினர். வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதித்து இருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தது.