/ தினமலர் டிவி
/ பொது
/ 4 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை! JD Vance arrived at Delhi Airport
4 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை! JD Vance arrived at Delhi Airport
அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்ற பின், ஜே.டி.வான்ஸ் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். மனைவி உஷா, மகன்கள் இவான், விவேக், மகள் மேரிபெல் உள்ளிட்டோருடன் வான்ஸ் டில்லி ஏர்போர்ட் வந்தார். வான்ஸ், மனைவி உஷா மற்றும் குழந்தைகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். வான்சுக்கு ராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கள் குழந்தைகள் இந்தியாவுக்கு வரும் போது இந்திய பாரம்பரிய உடை அணிய வேண்டும் என வான்ஸ் - உஷா தம்பதி விரும்பினர். இதனால் மகன்கள் இருவரும் பைஜாமா குர்தாவும், மகள் அனார்கலி டைப் ஸ்கர்டும் அணிந்திருந்தனர்.
ஏப் 21, 2025