/ தினமலர் டிவி
/ பொது
/ கிறிஸ்தவ மத போதகரின் உறவினரும் பாலியல் வழக்கில் கைது|John Jebaraj |John Jebaraj RelativeArrest
கிறிஸ்தவ மத போதகரின் உறவினரும் பாலியல் வழக்கில் கைது|John Jebaraj |John Jebaraj RelativeArrest
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் தங்கி காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள சர்ச்சில் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்தார். இந்த சூழலில் சென்ற மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயது சிறுமிக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை, காட்டூரில் உள்ள மகளிர் போலீசில் அவர்களது பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஏப் 17, 2025