/ தினமலர் டிவி
/ பொது
/ வீடு விற்பனை கூட்டு மதிப்பு நிர்ணயிப்பதில் இழுபறி: தவிக்கும் மக்கள் | Joint value of buildings | Dra
வீடு விற்பனை கூட்டு மதிப்பு நிர்ணயிப்பதில் இழுபறி: தவிக்கும் மக்கள் | Joint value of buildings | Dra
தமிழகத்தில் அடுக்குமாடி கட்டுமான திட்டங்களில், வீடு விற்பனைக்கான நடைமுறை, டிசம்பர், 1 முதல் மாற்றப்பட்டது. நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., மதிப்புக்கு ஒரு பத்திரம், கட்டுமான ஒப்பந்தத்துக்கு ஒரு பத்திரம் என, தனித்தனியாக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. நிலம், கட்டடத்துக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வீடு விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மாவட்ட பதிவாளர்கள் வெளியிட்ட, மண்டல அளவில் வெளியான கூட்டு மதிப்புகளில், பல்வேறு பகுதிகள் விடுபட்டதாக புகார் எழுந்தது.
அக் 28, 2024