ஆஸ்பிடலுக்கு வந்தா புதுநோய்கள்: வெற்று விளம்பரம் திமுகவுக்கு தேவையா?
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக 2 பெண்கள் அட்மிட் ஆயினர். அவர்களுக்கு 2 நாட்களுக்கு முன் பிரவசம் நல்லபடியாக நடந்தது. பிரசவ வார்டில் அவர்களுக்கு கிழிந்து போன படுக்கைகள் வழங்கப்பட்டன. படுக்க முடியாத அளவுக்கு பெட் அலங்கோலமாக சுத்தமின்றி இருந்ததால் 2 பெண்களும் பச்சைக் குழந்தைகளுடன் தரையில் படுத்து உறங்கினர். பிறந்த குழைந்தைகளுக்கு வழங்க கூடிய தொட்டில் கூட இல்லாத அவல நிலை கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையில் உள்ளதாக, அந்த பெண்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஜூலை 16, 2025