/ தினமலர் டிவி
/ பொது
/ 60 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்த பள்ளி தாளாளர் | Kanchipuram | School Teacher | Kanchipuram School
60 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்த பள்ளி தாளாளர் | Kanchipuram | School Teacher | Kanchipuram School
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆசிரியர் சரவணன். காஞ்சிபுரம் அடுத்த ஒரிக்கை பகுதி தனியார் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 வரை வகுப்பு எடுக்கிறார். பள்ளியின் தாளாளர் அருண்குமார் சரவணனின் 25 ஆண்டு கால பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்க முடிவு செய்தார். காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆசிரியர் சரவணனுக்கு 60 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இன்று கிரகப்பிரவேசம் செய்து வீட்டின் சாவியை சரவணனிடம் வழங்கி கௌரவித்தார்.
மே 11, 2025