உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவர்களை மனம் தளர வைக்காதீர்: அண்ணாமலை k.annamalai bjp Udhayanidhi chief minister trophy

மாணவர்களை மனம் தளர வைக்காதீர்: அண்ணாமலை k.annamalai bjp Udhayanidhi chief minister trophy

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பதிவை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்திருக்கிறார். அதில், 12 முதல் 19 வயது வரையிலான மாணவர்களை ஒரே பிரிவில் போட்டியிட வைத்திருக்கிறார்கள். இது தேசிய விளையாட்டு கூட்டமைப்பு வகுத்துள்ள வயது வரம்பு பிரிவுகளான 11 - 14 வயது, 14 - 17 வயது, 17 - 19 வயது என்பதற்கு முற்றிலும் எதிரானது. அதோடு மட்டுமின்றி 12 வயது பள்ளிச்சிறுவனை, 19 வயது சிறுவனோடு ஒரே பிரிவில் போட்டியிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்பது முட்டாள்தனமும் கூட.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ