தப்பிய கொடூரன்: கண்ணூரில் சிக்கிய பின்னணி | KANNUR JAIL
கேரள மாநிலம் கண்ணூரில் உயர் பாதுகாப்பு கொண்ட மத்திய சிறை உள்ளது. இன்று காலை வழக்கம் போல கைதிகள் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. மரண தண்டனை குற்றவாளி கோவிந்தசாமி மாயமானது தெரியவந்தது. ஒரு கை இழந்த மாற்றுத்திறனாளியான அவனது அறையில், ஜெயில் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சிறையை சுற்றி உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் அலசினர். இரவு 1.15க்கு கோவிந்த சாமி சிறையில் இருந்தது தப்பியது உறுதியானது. இத்தனைக்கும் உயர் பாதுகாப்பு கொண்ட தனி அறையில் தான் அடைக்கப்பட்டிருந்தான். அதனை தாண்டி சென்றாலும் சிறையை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி எப்படி தப்பி சென்றான் என்கிற சந்தேகம் எழுந்தது. துணியை கயிறு போல கட்டி மின்வேலியை தாண்டினான் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கண்ணூர் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன், குடியிருப்புகளில் தீவிர சோதனை நடத்தினர். சிறையில் இருந்து 2 கிலோமீட்டரில் தாலப் எனும் பகுதியில் கோவிந்தசாமி பிடிபட்டான்.