உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயிலை கவிழ்க்க சதியா? ரயில்வே போலீஸ் விசாரணை| cylinder | rail track | Kanpur | Uttar Pradesh

ரயிலை கவிழ்க்க சதியா? ரயில்வே போலீஸ் விசாரணை| cylinder | rail track | Kanpur | Uttar Pradesh

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5.50 மணியளவில் பிரேம்பூர் ஸ்டேஷன் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் ஒரு கேஸ் சிலிண்டர் இருந்தது. இதைப்பார்த்த இன்ஜின் டிரைவர் உடனடியாக எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். ரயில்வே போலீசார் ஸ்பாட்டுக்கு விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் கிடந்த 5 லிட்டர் காலி சிலிண்டரை கைப்பற்றினர். அதன்பிறகு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே பீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் கிடந்தன. தண்டவாளம் அருகே அமர்ந்து மது அருந்திய ஆசாமிகள் சிலிண்டரை வைத்து விட்டுச் சென்றிருக்கலாம்; அவர்கள் ரயிலை கவிழ்க்க சதி செய்தார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இந்த மாத துவக்கத்தில் பிரயாக்ராஜில் இருந்து அரியானாவின் பிவானிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் மீது மோதியது. டிரைவர் எமர்ஜென்சி பிரகே்கைபோட்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆகஸ்ட் 17ல் வாரணாசி‍யில் இருந்து ஆமதாபாத் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தண்டவாளத்தில் கிடந்த பொருள் மீது மோதியதால் 22 பெட்டிகள் தடம்புரண்டன. கடந்த வாரம், பிலாஸ்பூர்-ருத்ராபூர் நகர் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பி கண்டுபிடிக்கப்பட்டது.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ