உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீதிபதியின் சர்ச்சை கருத்தால் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி | Karnataka high court judge | Controversia

நீதிபதியின் சர்ச்சை கருத்தால் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி | Karnataka high court judge | Controversia

பெங்களூருவில் நில உரிமையாளர், குத்தகைதாரர் இடையிலான பிரச்னை குறித்த வழக்கு கர்நாடகா ஐகோர்ட்டில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி, வேதவ்யாசச்சர் ஸ்ரீஷனாந்தா விசாரித்தார். அப்போது, பெங்களூருவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என அவர் குறிப்பிட்டார். பெண் வக்கீல் முகம் சுழிக்கும் விதமான கருத்துக்களையும் கூறியது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாக்களிலும் வைரலானது. இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் பென்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எந்த மாதிரியான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. கோர்ட் நடைமுறைகளை சோசியல் மீடியாக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றன.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ