/ தினமலர் டிவி
/ பொது
/ டேப் போட்டு ஒட்டப்பட்ட பைப் லைன்! கவுன்சிலர் டென்ஷன் | Karur | Pallapatti Municipality | Councilor
டேப் போட்டு ஒட்டப்பட்ட பைப் லைன்! கவுன்சிலர் டென்ஷன் | Karur | Pallapatti Municipality | Councilor
இத குடிச்சு பப்ளிக் சாகறதுக்கா? போனில் வெளுத்த திமுக பெண் கவுன்சிலர் கரூர் பள்ளப்பட்டி நகராட்சியின் 10வது வார்டு கவுன்சிலர் திமுகவை சேர்ந்த வஹிதா பானு. இவர் வார்டுக்கு உட்பட்ட தெருவில் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் செல்லக்கூடிய குடிநீர் பைப் லைன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சரி செய்து கொடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளிடம் கவுன்சிலர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அலட்சியமாக பைப் லைன் மீது டேப் போட்டு ஒட்டி சரி செய்துள்ளனர். நேரில் வந்து பார்த்து டென்ஷன் ஆன வஹிதா அதிகாரிகளுக்கு போன் செய்து திட்டி தீர்த்தார். துறை ரீதியாக புகார் கொடுக்க உள்ளதாக கவுன்சிலர் கூறி உள்ளார்.
ஜூன் 10, 2025