/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேச்சு | Karur | Vijay | Vijay Speech | Karur Stamped
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேச்சு | Karur | Vijay | Vijay Speech | Karur Stamped
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சென்ற மாதம் 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த விவகாரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அரசு சார்பில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக ஒரு வாரம் கழித்து மவுனம் கலைத்த விஜய் வீடியோவில் பேசி இரங்கல் தெரிவித்தார். இந்த சூழலில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார் கூட்ட நெரிசலில் பலியான தனுஷ் குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி உள்ளார். நடக்கக்கூடாதது நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என பேசிய விஜய், இறந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
அக் 07, 2025