வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முனிசிபல் சட்ட படி எந்த பொருளையும் எரிக்க கூடாது .....
கரூர் மரணம் குறித்து விசாரித்த SIT ஆபீஸில் ஆவணங்கள் எரிப்பு|Karur stampede CBI probe|Supreme Court
கரூரில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் SIT எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி சிறப்பு புலனாய்வு குழுவால் இதுவரை விசாரிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கரூர் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. தற்போது ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர். விரைவில் சிபிஐ விசாரணை ஆரம்பமாக உள்ள நிலையில் கரூரில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நடந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே வழக்கு தொடர்பாக மீதமிருந்த ஆவண நகல்கள், காகித துண்டுகள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளது. எரிந்த காகித துண்டுகளுடன் பென் டிரைவ் ஒன்றும் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முனிசிபல் சட்ட படி எந்த பொருளையும் எரிக்க கூடாது .....