இதெப்படி நடந்துச்சு... இந்தியாவுக்கு பேரதிர்ச்சி | Kashmir | US M4 Rifle | PAK ISI | POK | Taliban
காஷ்மீரில் சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதம் அடுத்தடுத்து நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேரை பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அதன் தொடர்ச்சியாக அதே மாதம் இறுதி வாரம் ஜம்மு மாவட்டம் ஆக்னூர் Akhnoor என்ற இடத்தில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அணிவகுத்து சென்ற ராணுவ வண்டிகள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்களுடன் சென்ற அம்புலன்சை குறி வைத்து தாக்கினர். நம் வீரர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. பயங்கரவாதிகள் இருந்த இடத்தை ராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது நடந்த பயங்கர துப்பாக்கிச்சண்டையில் தான் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரின் தொடர்ச்சியாக முக்கிய தகவல் ஒன்று இப்போது வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. அதாவது, கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்களை நம் ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். அவற்றை சோதித்த போது 3 பேரும் பயன்படுத்தியது அமெரிக்காவின் தயாரிப்பான சக்தி வாய்ந்த M4 Rifile ரக துப்பாக்கி என்பது தெரிந்தது. பயங்கரவாதிகள் கைக்கு அமெரிக்க ஆயுதம் எப்படி போனது என்பது தான் அதிர்ச்சிக்கு முக்கிய காரணம்.