இந்தியா- பாக் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சண்டை: பீதியில் மக்கள் kashmir terror attack |gunfight
2019ம் ஆண்டில் 307 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்த பிறகு காஷ்மீரில் சுற்றுலா துறை அபரிமிதமான அளவுக்கு வளர்ச்சியை கண்டது. பஹல்காமில் கடந்த 22ம் தேதி யாருமே எதிர்பாராத கொடூரமான தாக்குதலை லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய பிறகு நிலைமை தலைகீழாகி விட்டது.. பயங்கரவாதிகளை தூண்டி விடும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக பலவித அதிரடி நடவடிக்கைளை இந்தியா எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வேலைகளை முழுவீச்சில் மத்திய அரசு துவங்கியுள்ளதால், இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வீரர்களை குவித்து வருகிறது. இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி காஷ்மீர் சென்று நிலவரத்தை ஆராய்ந்தார். பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.