குடும்பத்துடன் கீர்த்தி ஏழுமலையானை தரிசித்தார் | Keerthi Suresh Marriage| Keerthi Suresh Tirumalai
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பிபி ஜான் ஹிந்திப் படம் விரைவில் வெளியாக உள்ளது. பல முன்னணி நடிகர்களுடன் கீர்த்திக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கீர்த்தி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கொச்சியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஆண்டனியும் கீர்த்தியும் பள்ளிப் பருவ நண்பர்கள். இருவரும் 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கீர்த்திக்கு பிரசாதம் வழங்கினர். பிறகு அங்கிருந்த ரசிகர்கள் கீர்த்தியுடன் செல்பி எடுத்தனர். ரசிகர்கள் வழங்கிய பரிசுகளை பெற்றுக்கொண்டார். பிபி ஜான் படம் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடக்க உள்ளது. அதற்காக சாமி கும்பிட வந்தேன் என கீர்த்தி கூறினார்.