மாநில அரசால் வெளியுறவு செயலரை நியமிக்க முடியுமா?
கேரள மாநில மக்கள் வேலை நிமித்தமாக, மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் நலனுக்காக, கடந்த ஜூலை 15ம் தேதி அன்று, கேரள அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரி வாசுகி என்பவரை, கேரளாவின் வெளியுறவு செயலராக நியமித்துள்ளது. தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாடு துறை செயலாளராக உள்ள வாசுகிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜூலை 20, 2024