உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹2.25 கோடி பணத்துடன் கேரள லாட்டரிகள் பறிமுதல்! | Kerala lotteries | Coimbatore | Crime

₹2.25 கோடி பணத்துடன் கேரள லாட்டரிகள் பறிமுதல்! | Kerala lotteries | Coimbatore | Crime

கோவையில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்த கோவை எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவிட்டார். சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கோவை அடுத்த கருமத்தம்பட்டி எலச்சிபாளையத்தில் நாகராஜ் வீட்டில் சோதனை நடந்தது. லாட்டரி சீட்டுகள் சிக்கும் என சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. நாகராஜ் வீட்டில் அள்ள அள்ள கணக்கில் வராத 500 ரூபாய் கட்டுகள் சிக்கின. மொத்தம் 2 கோடியே 25 லட்சம் பணம், தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 லட்சத்து 24 ஆயிரத்துக்கு 2000 ரூபாய் நோட்டுகளும் இருந்தது. முதல் கட்ட விசாரணையில் கோவை மற்றும் திருப்பூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரிய வந்துள்ளது. நாகராஜ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு புழங்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் போலீசார் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ