உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 18 லாரிகளில் புறப்பட்ட கேரள மாநில மருத்துவ கழிவுகள் | Kerala medical waste | Green tribunal order |

18 லாரிகளில் புறப்பட்ட கேரள மாநில மருத்துவ கழிவுகள் | Kerala medical waste | Green tribunal order |

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கோடகநல்லூர், நடுக்கல்லூர், முக்கூடல், மேலத்திடியூர் பகுதிகளில் கேரளாவின் மருத்து கழிவுகள் மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டன. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுத்தமல்லி, முன்னீர் பள்ளம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இடைத்தரகர்களாக செயல்பட்ட மாயாண்டி, மனோகர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் கேரளாவை சேர்ந்த சிலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவ கழிவுகளை கொட்டியது தெரிந்தது.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !