/ தினமலர் டிவி
/ பொது
/ டிராபிக் ஜாமில் திணறிய சாலைகள் ஊர்ந்து சென்ற வாகனங்கள் | kilambakkam| independence day
டிராபிக் ஜாமில் திணறிய சாலைகள் ஊர்ந்து சென்ற வாகனங்கள் | kilambakkam| independence day
சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் தங்கியிருக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சொந்த வாகனங்களில் செல்பவர்களும் ஒரே நேரத்தில் கிளம்பியதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருந்தது. ஐயஞ்சேரி சிக்னல் முதல் வண்டலூர் மேம்பாலம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், 300க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆக 15, 2025