உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலை கிராம மக்களின் துயரம் வைரல் வீடியோ! | viral video | Kodaikanal | mountain village

மலை கிராம மக்களின் துயரம் வைரல் வீடியோ! | viral video | Kodaikanal | mountain village

கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி வெள்ள கெவி ஊராட்சி. இங்கு சின்னூர், பெரியூர், சின்னூர் காலனி உள்ளிட்ட ஐந்து மலை கிராமங்கள் உள்ளது. வெள்ள கெவி கிராமத்தில் வசித்தவர் மணிமேகலை வயது 33. நேற்று மாலை இவருக்கு ரத்த அழுத்த குறைபாட்டால் திடீரென உடல்நிலை மோசமானது. முறையான சாலை வசதி இல்லாததால் இந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வருவதில்லை. கிராமத்தினர் டோலி கட்டி 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பக்கரை பகுதிக்கு தூக்கி சென்று, அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். பரிசோதனையில் மணிமேகலை 30 நிமிடத்திற்கு முன்பே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். மணிமேகலை உடலை மீண்டும் மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் பெரியகுளத்தில் உள்ள நகராட்சி பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ