மம்தா சொன்னது எதுவும் நடக்கல டாக்டரின் பெற்றோர் கொதிப்பு! kolkata doctor crime| mamatha| WB crime
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதை கண்டித்தும், நீதி கேட்டும் மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் போராட்டத்தை ஒடுக்கவே முதல்வர் மம்தா பேனர்ஜி முயற்சிப்பதாக கொல்லப்பட்ட டாக்டரின் தாய் கூறினார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மம்தா கூறினார்; ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. ஒருவன் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளான். மகளுக்கு நேர்ந்த கொடூரத்தில் நிறைய பேருக்கு தொடர்பு இருப்பதாக உறுதியாக நம்புகிறோம். ஒட்டுமொத்த துறையும் இந்த சம்பவத்துக்கு காரணம். இந்த விவகாரத்தில் போலீசார் சரிவர செயல்படவில்லை. டாக்டர்கள் போராட்டத்தை முதல்வர் மம்தா ஒடுக்கு நினைக்கிறார். அதனால்தான் மாநிலத்தில் 44 தடை உத்தரவு போட்டு இருக்கிறார் என டாக்டரின் தாய் கூறினார்.