உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உண்மை கண்டறியும் சோதனையில் தெரிந்தது என்ன? Kolkata lady doctor rape and murder case | CBI Investiga

உண்மை கண்டறியும் சோதனையில் தெரிந்தது என்ன? Kolkata lady doctor rape and murder case | CBI Investiga

பெண் டாக்டர் கொலை வழக்கு அவிழும் மர்ம முடிச்சுகள்! டிஸ்க்: உண்மை கண்டறியும் சோதனையில் தெரிந்தது என்ன? Kolkata lady doctor rape and murder case | CBI Investigation | Sanjay Roy கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மேற்கு வங்க அரசு தவறிவிட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கொல்கத்தா சிறப்பு கோர்ட் உத்தரவை பெற்று, நேற்று சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பெண் டாக்டரை பலாத்காரம் செய்த போது சஞ்சய் ராய் மிருகத்தனத்துடன் நடந்து கொண்டுள்ளான். தவறு செய்கிறோம் என்ற எந்த உறுத்தலும் இன்றி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்ததும் உண்மை கண்டறியும் சோதனையில் தெரிய வந்ததாக சிபிஐ அதிகாரிகள் கூறினர். சஞ்சய் ராய் பெண்களை எப்போதும் தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பான் என்பதும் உண்மை கண்டறியும் சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. கேஜி கர் மருத்துவக் கல்லுாரியின் முதல்வராக இருந்த டாக்டர் சந்தீப் கோஷ், கொலை நடந்த இரண்டாவது நாள் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை