பெண் டாக்டர் வழக்கில் அதிர வைத்த 3 முக்கிய உத்தரவு | kolkata woman doctor case | CBI | supreme court
பெண் டாக்டர் வழக்கில் ட்விஸ்ட் போலீஸ், அரசுக்கு கிடுக்கிப்பிடி! சுப்ரீம் கோர்ட் விளாசல் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த டாக்டர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். சஞ்சய் ராய் என்பவனை கொல்கத்தா போலீஸ் கைது செய்தது. பின்னர் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. இன்னொரு புறம் பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டும், டாக்டர், நர்ஸ்களுக்கு பாதுகாப்பு கோரியும் நாடு தழுவிய தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பரபரப்புக்கு இடையே கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன் வந்து விசாரிப்பதாக அறிவித்தது. அதன்படி தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு பெண் டாக்டர் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கொல்கத்தா அரசு, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் லோக்கல் போலீசை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் லெப்ட் ரைட் வாங்கினார். இவ்வளவு கொடூரமான சம்பவம் மருத்துவமனைக்குள் நடந்து இருக்கிறது. பெண் டாக்டர் மிருகத்தனமானவனால் சிதைக்கப்பட்டுள்ளார். மருத்துவக் கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார்? போலீஸ் என்ன செய்தது? பெண் டாக்டர் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு 3 மணி நேரம் கழித்து கொல்கத்தா போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. உடனடியாக வழக்கு பதிவு செய்யாதது ஏன்? பெற்றோருக்கு தற்கொலை என்று சொன்னவர் யார்? எதற்காக அப்படி சொன்னார்? மகள் உடலை பார்க்க விடாமல் பெற்றோரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தது ஏன்? என்று தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.