42 நாள் ஸ்டிரைக் வாபஸ்: பணிக்கு திரும்பிய டாக்டர்கள் kolkata woman doctor death doctors protest mama
டாக்டர்கள் முன்வைத்த 5 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை ஏற்பதாக மம்தா தெரிவித்தார். அதன்படி,கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் நீக்கப்பட்டார். மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட சுகாதாரத்துறை முக்கிய அதிகாரிகளும் நீக்கப்பட்டனர். டாக்டர்கள் பணிக்கு திரும்ப முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். கொல்கத்தாவில் நேற்று பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு டாக்டர்கள், விஞ்ஞானிகள் என பல துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடந்தது. அதைத் தொடர்ந்து,டாக்டர்களுடன் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த் பேசினார். டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான எஞ்சிய கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதை ஏற்று, 42 நாட்களுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்பினர். நோயாளிகளின் நலன் கருதி, ஆபரேஷன் உள்ளிட்ட அவசர மருத்துவ சேவைகளை துவங்கினர். ஆனால், வெளிப்புற நோயாளிகள் பிரிவில் பணியில் ஈடுபட மாட்டோம் என ஜூனியர் டாக்டர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இதுபற்றி டாக்டர்கள் போராட்டக்குழுவை சேர்ந்த டாக்டர் அனிகித் மஹதோ கூறியதாவது: டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமைச் செயலாளர், போலீஸ் கமிஷனர், ஜூனியர் டாக்டர்களை உளளடக்கிய குழு அமைக்க வேண்டும்: அரசு மருத்துவனைகளில் டாக்டர்கள் குறைதீர் குழுவை ஏற்படுத்த வேண்டும், சுகாதாரத் துறை செயலாளரை பணியில் இருந்து நீக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை.