பெண் டாக்டர் மரணத்தில் அதிர வைக்கும் மர்மம் | Kolkata woman doctor death | CBI | kolkata doctor case
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. டாக்டர்கள் கொந்தளித்ததால் மேற்கு வங்க முதல்வர் மம்தா சிறப்பு விசாரணை குழுவை அமைத்தார். அடுத்த 7 மணி நேரத்தில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான். க்ரைம் சீனில் அவன் நுழைந்த சிசிடிவி காட்சி, ஸ்பாட்டில் அவன் விட்டு சென்ற ப்ளூடூத் ஹெட்செட், அவனது ஷூவில் இருந்த ரத்தக்கறை தான் சஞ்சய் ராயை சிக்க வைத்த முக்கிய ஆதாரங்கள். பெண் டாக்டர் நக இடுக்கில் இருந்த ரத்தக்கறை மற்றும் தோலில் சஞ்சய் ராய் டிஎன்ஏ இருந்தது. இதுவும் அவனுக்கு எதிரான அதிமுக்கிய எவிடன்ஸ். ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் விசாரணையை முடிக்காவிட்டால் வழக்கை சிபிஐக்கு மாற்றி விடுவேன் என்று லோக்கல் போலீசாருக்கு மம்தா கெடு விதித்து இருந்தார். ஆனால் அந்த கெடு முடிய 5 நாள் இருந்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டது கொல்கத்தா ஐகோர்ட். காரணம், இந்த சம்பவத்தில் யாரும் கற்பனையே செய்ய முடியாத அளவு பல திருப்பங்களும், மர்மங்களும் இருப்பது தான். அப்படி என்னென்ன மர்மம் நிலவுகிறது என்பதை பார்க்கலாம். சம்பவத்தன்று அதிகாலை 3 டு 6 மணிக்குள் பெண் டாக்டர் இறந்திருக்க வேண்டும் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்கிறது. அதிகாலை 4 மணி அளவில் பெண் டாக்டர் இருந்த செமினார் ஹாலுக்குள் சஞ்சய் ராய் நுழைந்தான். 45 நிமிடம் உள்ளே இருந்தான் என்கிறது சிசிடிவி ரிப்போர்ட். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், சிசிடிவி காட்சி ஆதாரம் ஒத்துப்போகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் இதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் தான் மர்மமாக இருக்கின்றன. அதிகாலையில் கொல்லப்பட்ட பெண் டாக்டர் சடலத்தை காலை 7:30 மணிக்கு தான் ஊழியர்கள் பார்த்தனர். உடனே மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் போனது. அவர்கள் மறுநொடியே போலீசுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.