/ தினமலர் டிவி
/ பொது
/ இரவில் ஏற்பட்ட மின்தடை; வைரலாகும் வீடியோ! | Kotagiri Hospital | Hospital Viral Video
இரவில் ஏற்பட்ட மின்தடை; வைரலாகும் வீடியோ! | Kotagiri Hospital | Hospital Viral Video
கோத்தகிரி இடுகொரை பகுதியை சேர்ந்தவர்கள் துரை, ஆனந்தி தம்பதி. இவர்களின் 3 வயது மகளுக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மின் இணைப்பு விட்டு விட்டு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர்கள், டார்ச் லைட் மற்றும் செல்போன் லைட் வெளிச்சத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். டார்ச்லைட் மூலம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
நவ 13, 2024